அனுமதியின்றி மதுபானவிற்பனை: 4 பேர் கைது



அனுமதியின்றி மதுபானவிற்பனை: 4 பேர் கைது



குளித்தலை:குளித்தலை அடுத்த, சின்னரெட்டிபட்டி கிராமத்தில், அரசு அனுமதி இல்லாமல் தனியார் பார் செயல்பட்டு வந்தது. இது குறித்து டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு வந்த தகவல் படி, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது, அரசு அனுமதி இல்லாமல் பார் நடத்தி, மதுபானங்கள் விற்பனை செய்த திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த பாபு, 65, கோபால், 43, ராதாகிருஷ்ணன், 41, பூசன், 48, ஆகிய நான்கு பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து, 1,320 ரூபாய் மற்றும் நான்கு மொபைல்போன், மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர்.

Advertisement