சக்தி வினாயகர் கோவில் பால்குட ஊர்வலம்
சக்தி வினாயகர் கோவில் பால்குட ஊர்வலம்
தர்மபுரி:தர்மபுரி, டவுன் மதிகோன்பாளையம் ராமாக்காள் ஏரிக்கரையில், சக்தி வினாயகர் கோவில் உள்ளது. இதில், கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஏப்.,4) நடக்கிறது. கும்பாபிஷேக விழா கடந்த மார்ச், 31ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று மதிகோன்பாளையம் மாரியம்மன் கோவிலில் சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. முன்னதாக, காலையில் கங்கை பூஜை செய்யப்பட்டு கங்கை தீர்த்தம், பால்குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்றது-. வினாயகருக்கு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் வாஸ்து ஹோமம், முதல் யாக சாலை பூஜை, விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. இன்று அதிகாலை, 2ம் கால யாகசாலை பூஜை, காலை, 9:00 மணிக்கு சக்திவிநாயகர், முருகன், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம்
நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மதிகோன்பாளையம் ஊர்கவுண்டர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.
மேலும்
-
வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது காங்.,
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை