மின்சாரம் தொடர்பானபுகார் அளிக்க சிறப்பு முகாம்


மின்சாரம் தொடர்பானபுகார் அளிக்க சிறப்பு முகாம்


தர்மபுரி:மின்சாரம் தொடர்பான புகார் மனுக்களை அளிக்க, ஏப்.,5 அன்று நடக்கும் சிறப்பு முகாம் நடக்கிறது என, தர்மபுரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள், மின் கட்டணத்தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை அளிக்கலாம். இதில், தங்கள் பகுதிக்கு உட்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களான தர்மபுரி, பாலக்கோடு, அரூர் மற்றும் கடத்துார் ஆகிய இடங்களில் ஏப்., 5 அன்று சனிக்கிழமை காலை, 11:00 முதல், மாலை, 5:00 மணி வரை, புகார் மனுக்கள் பெறப்பட்டு, நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விபரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படும். எனவே, இம்முகா‍மை மின் நுகர்வோர் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement