குட்கா கடத்திய ஜீப்பைதுரத்தி பிடித்த போலீஸ்
குட்கா கடத்திய ஜீப்பைதுரத்தி பிடித்த போலீஸ்
காரிமங்கலம்:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள கர்த்தாரஹள்ளி புதிய சுங்கசாவடி வழியாக, குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் போலீசார் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சுங்கச்சாவடி அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாத ஜீப் ஒன்று, சாலையில் வைத்திருந்த பேரி கார்டுகளை உடைத்துக்கொண்டு, சீறிப்பாய்ந்தது. ஜீப்பை, காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் எஸ்.ஐ.,-க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் விரட்டி சென்றனர். இதில், ஜீப் டிரைவர் பாலக்கோட்டில் இருந்து, காரிமங்கலம் செக்போஸ்டை கடந்து, தர்மபுரி நோக்கி சென்றார். அப்போது, விடாது சேசிங் செய்த போலீசார், காரிமங்கலம் அடுத்துள்ள அகரம் பிரிவு சாலையில் ஜீப்பை மடக்கி பிடித்தபோது, அதன் டிரைவர் தப்பினார். ஜீப்பை சோதனை செய்ததில், 2.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 405 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து, ஜீப்புடன் குட்காவை பறிமுதல் செய்த, காரிமங்கலம் போலீசார், தப்பி சென்ற டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது காங்.,
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை