ஆக்கிரமிப்பு அகற்ற செய்த அளவீடு என்னாச்சு?பா.ஜ., சமூக வலைதள போஸ்டரால் பரபரப்பு
ஆக்கிரமிப்பு அகற்ற செய்த அளவீடு என்னாச்சு?பா.ஜ., சமூக வலைதள போஸ்டரால் பரபரப்பு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், 'ஆக்கிரமிப்பை அகற்ற நில அளவீடு செய்தது என்னாச்சு' என, பா.ஜ., சார்பில் சமூக வலைதளங்களில் வெளியான பதிவு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, சேலம் மெயின் ரோட்டில், ஓடை புறம்போக்கு, கிணறு, தரிசு புறம்போக்கு கிணறு உள்ளது. இதில் ஓடை புறம்போக்கு இடங்களை சிலர் ஆக்கிரமித்து, வணிக வளாகம், வீடுகள் கட்டி உள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள், முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் துறையினருக்கு புகார் கொடுத்தனர். அதன்படி கடந்த ஜன., 25 ல் பாப்பிரெட்டிப்பட்டி டவுன் பஞ்., தலைவர் மாரி முன்னிலையில், பாப்பிரெட்டிப்பட்டி வட்ட சார் ஆய்வாளர் முருகன், வி.ஏ.ஓ., நித்யா உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், புகார் கூறப்பட்ட நிலத்தை அளவீடு செய்தனர். இப்பணி முடிவில், 15 க்கும் மேற்பட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியது தெரியவந்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 3 மாதமாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
தற்போது பேரூராட்சியில், அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் இருந்தால், பட்டா வழங்கலாம் என, அரசு உத்தரவிட்டதையடுத்து, இந்த ஆக்கிரமிப்பு இடங்களுக்கு சிலர் பட்டா வாங்க முயற்சிப்பதும், இதற்கு வருவாய் துறையினர் உறுதுணையாக இருப்பதாகவும், மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி, பா.ஜ., கிழக்கு மண்டலம் சார்பில், 'மக்களே, பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, நில அளவீடு செய்தீர்களே என்னாச்சு, அந்த சார்.... இடத்தை அளந்தாச்சு, நோட்டீஸ் கொடுத்தாச்சு, பயப்படற மாதிரி மிரட்டியாச்சு, பணத்தை புடுங்கியாச்சு, பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வரை, பா.ஜ., விடப்போவது இல்லை' என வாசகங்களை அச்சடித்து, பாப்பிரெட்டிப்பட்டி, பா.ஜ., கிழக்கு மண்டலம் சார்பில், சமூக வலைதளங்களில் வெளியான பதிவு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய, பா.ஜ., கிழக்கு மண்டல பொறுப்பாளர் பிரவீன்குமார் கூறியதாவது:
பாப்பிரெட்டிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அரசு ஓடை புறம்போக்கை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை மீட்க, பா.ஜ., மனு அளித்தது. அதன்படி வருவாய் துறையினர் அளந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், ஆக்கிரமிப்பாளர்களின் 'கவனிப்பால்', வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றுவதிலிருந்து பின் வாங்கி விட்டனர். கடந்த ஜன., 25 ல் நிலம் அளக்கப்பட்டும், இதுவரை நடவடிக்கை இல்லை. உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது காங்.,
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை