'போட்டா ஜியோ' கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
'போட்டா ஜியோ' கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அனைத்து உள்ளாட்சி பணியாளர்கள், 'போட்டா ஜியோ' சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு அலுவலர்களுக்கு வழங்கிய, 7வது ஊதியக்குழு நிர்ணயத்தில், 21 மாத நிலுவைத்தொகையை பணியாளர்களுக்கு வழங்காமல், நிலுவையாக உள்ளதால், அதை விடுவித்து நிலுவை தொகையை வழங்க வேண்டும். 2009 ஜூன், 1 முதல் பணியேற்று, 7வது ஊதியக்குழுவின் மூலம் ஊதிய கட்டமைப்பில் பாதிக்கப்பட்டு ஓராண்டு காலம் இடைவெளியில், 15,000 ரூபாய்க்கும் குறைவான மாத ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், அரசு அலுவலர் ஒன்றியம் கார்த்திகேயன், பட்டதாரி ஆசிரியர் கழக சட்ட ஆலோசகர் பாஸ்கர், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேரலாதன், அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணைத் தலைவர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்