மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்



மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி:இந்திய மாதர் தேசிய சம்மேளனம், தர்மபுரி மாவட்டக்குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செய்லாளர் கமலா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் விஜயா, பொருளாளர் செந்தாமரை நிர்வாகிகள் பேபி, சுகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கண்ணகி, துணை செயலாளர் லலிதா உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்புணர்வுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். நிலுவையிலுள்ள பெண்களுக்கு எதிரான வழக்குகளை உடனே விசாரணை செய்து, நீதி வழங்க வேண்டும். இளம் வயது திருமணங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலினம் கண்டறியும் ஸ்கேன் சென்டர்களை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவியரை பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்புக்குழு அமைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கந்து வட்டி கொடுமையை ஒழிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட பொறுப்பாளர் முனியம்மாள் நன்றி கூறினார்.

Advertisement