அரசு கல்லுாரி மாணவர்களுக்குஅடிப்படை வசதிக்கு நா.த.க., மனு
அரசு கல்லுாரி மாணவர்களுக்குஅடிப்படை வசதிக்கு நா.த.க., மனு
தர்மபுரி:நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், அடிப்படை தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி முறையாக இல்லை. 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், மிகுந்த
இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.இதனால், நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களால் தான் தமிழகம் முன்னேறுகிறது என, பெருமை பேசும் திராவிட ஆட்சியில், அடிப்படை தேவையான கழிப்பறை, துாய குடிநீர் வசதி கூட ஏற்படுத்தவில்லை. இது வெட்கக்கேடானது. வசதி செய்து தரவில்லை எனில், நா.த.க., சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என கூறியிருந்தார்.
நேற்று, நா.த.க., தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர் நேதாஜி தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரசு கல்லுாரி முதல்வரிடம் மனு அளிக்க சென்றனர். கட்சியினர் திரளாக சென்றதால், கல்லுாரி வளாகத்தினுள் அனுமதிக்கவில்லை. பின்னர், அங்கு வந்த கல்லுாரி முதல்வர் கண்ணன், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறினார். இதையடுத்து, நா.த.க.,வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும்
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்