வீடு கட்டுபவர்களுக்கு ஆணையைகொடுக்க பி.டி.ஓ.,வுக்கு அறிவுறுத்தல்


வீடு கட்டுபவர்களுக்கு ஆணையைகொடுக்க பி.டி.ஓ.,வுக்கு அறிவுறுத்தல்


அரூர்:அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று காலை, 11:30 மணிக்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வந்தார். தொடர்ந்து, அவர் தலைமையில், பி.டி.ஓ.,க்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. பின், மதியம், 1:30 மணிக்கு கூட்டம் முடிந்து வெளியில் வந்த கலெக்டரிடம், அங்கு காத்திருந்த பொதுமக்கள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், வீடு வழங்கக்கோரி, ஏற்கனவே மனு அளித்ததாகவும், இதுவரை வீடு வழங்க ஆணை வழங்கவில்லை என புகார் தெரிவித்து, மனு அளித்தனர். அவர்களிடமிருந்து மனுக்களை பெற்ற கலெக்டர், அருகிலிருந்த பி.டி.ஓ., ரவிச்சந்திரனிடம், ஏன் அவர்களுக்கு வீடு வழங்கவில்லை எனக்கேட்டதுடன், ஆணை பெற்று ஓராண்டாகியும், வீடு கட்டாதவர்களுக்கு ஆணை கொடுப்பீர்கள். ஆனால், வீடு கட்டுபவர்களுக்கு கொடுக்க மாட்டீர்கள் என கேட்டதுடன், வீடு கட்டுபவர்களுக்கு ஆணை கொடுங்கள் என அறிவுறுத்தினார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர் சதீஸ், அருகிலிருந்த அரூர் தாசில்தார் பெருமாளிடம், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை மதிப்பதில்லை, என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள், யாரிடம் போய் சொல்கிறீர்களோ சொல்லுங்கள் என, நீங்கள் கூறுவதாக, உங்கள் மீது நிறைய புகார்கள் வருகின்றன. தாலுகா அலுவலகத்திற்கு தான், முதலில் வருவதாக இருந்தேன். ஆனால், நேர்முக உதவியாளர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மாற்றி அழைத்து வந்து விட்டார் என, டோஸ் விட்டார்.

Advertisement