உயர் நீதிமன்ற உத்தரவின் படிஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
உயர் நீதிமன்ற உத்தரவின் படிஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
பாலக்கோடு:பாலக்கோடு அருகே, பாலமனேரி ஏரியில், நீதிமன்ற உத்தரவின் படி, ஆக்கிரமிப்புக்களை வருவாய் துறையினர் நேற்று அகற்றினர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, அண்ணாமலைஹள்ளி பஞ்., உட்பட்ட பாலமனேரி ஏரி, 58 ஏக்கர் பரப்பில் உள்ளது. மழை காலங்களில் பிக்கனஹள்ளி, அண்ணாமலைஹள்ளி காப்பு காடு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மழை நீர், நீரோடைகள் வழியாக, பாலமனேரி ஏரிக்கு வரும். இந்த ஏரியின் உபரி நீர் கால்வாய் வழியாக, அண்ணாமலைஹள்ளி, எலுமிச்சனஹள்ளி, கேத்தனஹள்ளி, புலிக்கல், தும்பலஹள்ளி ஆகிய பஞ்.,களில் உள்ள ஏரிகளுக்கு மழைநீர் சென்றடையும். இந்நிலையில், பாலமனேரிக்கு சொந்தமான இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்ததால், மழைநீர் செல்வது தடைபட்டது.
இது குறித்து, அண்ணாமலைஹள்ளி பொதுமக்கள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் பாலமனேரி ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க, சென்னை உயர்நீதிமன்றம் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து நேற்று, பாலக்கோடு தாசில்தார் ரஜினி, துணை தாசில்தார் ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் தலைமையில், வெள்ளிசந்தை, மாரண்டஹள்ளி பிர்காவிற்கு உட்பட்ட சர்வேயர்கள், வி.ஏ.ஓ.,க்கள், ஏரி ஆக்கிரமிப்புக்களை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும்
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்