வேளாண் அடுக்கு திட்டம்: பொம்மிடியில் சிறப்பு முகாம்



வேளாண் அடுக்கு திட்டம்: பொம்மிடியில் சிறப்பு முகாம்


பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில், விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வேளாண் அடுக்கு திட்ட சிறப்பு முகாம், பொம்மிடி வி.ஏ.ஓ., அலுவலகத்தில், அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமையில் நடந்தது.
வேளாண் இணை இயக்குனர் (மத்திய திட்டம்) தேன்மொழி, வேளாண் அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் விவசாயிகளின் ஆவணங்களான சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் கைபேசி, ஆகிவற்றை இணைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.
மேலும் விவசாயிகளுக்கு திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்து கூறினர். முகாமில், வேளாண் உதவி இயக்குனர் அருணன், வி.ஏ.ஓ., தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement