கொங்கணசித்தர் குகையில்குருவார சிறப்பு பூஜை


கொங்கணசித்தர் குகையில்குருவார சிறப்பு பூஜை


மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கணசித்தர் குகையில், வாரம்தோறும் வியாழக்கிழமை குருவார சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று மதியம், 12:00 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பால், தயிர், இளநீர், கரும்புசாறு, பன்னீர், விபூதி உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. மரப்பரை, சின்னமணலி, பெரியமணலி, நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, மேட்டுபாளையம், குஞ்சாம்
பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement