தேசிய வேளாண்மை சந்தைதேங்காய் பருப்பு விலை சரிவு
தேசிய வேளாண்மை சந்தைதேங்காய் பருப்பு விலை சரிவு
ப.வேலுார்:-தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று நடந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு விலை சரிந்தது.ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள், தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாவட்ட வியாபாரிகளும் வந்தனர்.
கடந்த வாரம் நடந்த ஏலத்திற்கு, 9,275 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 185.20, குறைந்தபட்சமாக, 140.19, சராசரி
யாக,183.50 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 14 லட்சத்து, 37 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 8,480 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
அதிகபட்சமாக கிலோ, 183.82, குறைந்தபட்சமாக, 155.19, சராசரியாக, 183.10 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 13 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தேங்காய் பருப்பு விலை சரிவால் விவ
சாயிகள் கவலையடைந்தனர்.
மேலும்
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்