திருச்செங்கோட்டில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் முகாம்


திருச்செங்கோட்டில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் முகாம்


மல்லசமுத்திரம்:திருச்செங்கோட்டில், நாளை மின்நுகர்வோர் குறைதீர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இதுகுறித்து, திருச்செங்கோடு மின்பகிர்மான கழக செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
நாளை காலை (5ம் தேதி) 11:00 முதல் மாலை 5:00 மணி வரை, திருச்செங்கோடு கீழேரிப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இதில், அனைத்து வகையான மின் கணக்கீடு தொடர்பான பிரச்னைகள், பழுதடைந்த மின்அளவி மாற்றுதல் தொடர்பான புகார், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுதல், குறைந்த மின் அழுத்தம் தொடர்பான புகார்கள், டி.என்.பி.டி.சி.எல்., சம்பந்தமான மற்ற புகார்களுக்கு தீர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement