நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்:மத்திய அரசின் ஓய்வூதியர் சட்ட திட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்-மோகனுார் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அழகிரிசாமி தலைமை வகித்தார். அதில் மார்ச், 25ல் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட ஓய்வூதிய சட்ட திருத்த
மசோதாவால், 8--வது ஊதியக்குழுவின் பலன் ஓய்வூதியர்களுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஓய்வூதியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வூதிய சட்ட திருத்த மசோதாவை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். போராடி பெற்ற உரிமை
களை பறிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர் ராமசாமி, பொருளாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement