அனுமதியில்லாத பேனர்கள் அகற்றம்


அனுமதியில்லாத பேனர்கள் அகற்றம்


சேந்தமங்கலம்:சேந்தமங்கலத்தில், அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும் பணி நடந்தது. சேந்தமங்கலம் டவுன் பஞ்., மற்றும் நெடுஞ்சாலையின் ஓரங்களில், ஏராளமான அனுமதியில்லாத பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், அதிக காற்று வீசும் போது விபத்து ஏற்படும் என்பதால், நேற்று போலீசார், டவுன் பஞ்., மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மூலம் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன.

Advertisement