டோல் கட்டண உயர்வை கண்டித்து முற்றுகை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் கட்டண உயர்வை கண்டித்து டோல் பிளாசாவை முற்றுகையிட முயன்ற புரட்சி பாரதம் கட்சியினர் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீபன் தலைமையில் மாவட்ட செயலாளர் கோபிநாத், துணை செயலாளர் தியாகராஜன், வழக்கறிஞர் அணி ராஜ பாண்டியன், நகர செயலாளர் ராம்குமார் முன்னிலையில் டோல் பிளாசா முற்றுகையிட முயன்றனர்.

டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், விஜயகுமார், மூர்த்தி ஆகியோர் முற்றுகையிட முயன்ற 32 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

Advertisement