அரசு பஸ் ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில், போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கூட்டாண்மை பயிற்சி மையத்தில் நடந்த கூட்டத்திற்கு, மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிந்திரகுமார் குப்தா முன்னிலை வகித்தார்.

டி.எஸ்.பி., ஞானவேல், எலும்பு முறிவு சிறப்பு டாக்டர் திருமாவளவன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கன், போக்குவரத்துக் கழக துணை மேலாளர் (வணிகம்) சிவக்குமார், துணை மேலாளர் (தொழில்நுட்பம்) அறிவண்ணல் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை வழங்கினர்.

ஓட்டுநர்கள், கண்டக்டர்கள், கூட்டாண்மை பயிற்சி மைய முதுநிலை உதவி பொறியாளர், அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement