அரசு பள்ளிகளில் ஆண்டு விழா

வானுார்: வரகுப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் திவ்வியநாதன் வரவேற்றார். மரக்காணம் வட்டாரக் கல்வி அலுவலர் அனுமந்தன் தலைமை தாங்கி, அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். அன்னம்புத்துார் ஊராட்சி தலைவர் புனிதவள்ளி ரவி, பிரைம் டிரஸ்ட் நிறுவனர் மரியரசு, அக்வா வாட்டர் ராஜேஷ், ஜெயச்சந்திரன், சரசு ராஜ்குமார் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் வட்டார வள மைய ஆசிரியர் கோசலா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

விழுப்புரம்



நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அரிகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

ஆசிரியர் பயிற்றுநர் ரேணுகா மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டு, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஊராட்சி தலைவி விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.

வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் வெண்ணிலா முன்னிலை வகித்தனர். துணை தலைவர் செந்தில்குமார், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஊராட்சி தலைவர் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தேவையான ஏசி, லேப்டாப் உட்பட பல பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர்.

செஞ்சி



பாடிப்பள்ளம் அரசு துவக்க பள்ளியில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் பவானி முன்னிலை வகித்தார் இல்லம் தேடி கல்வி பணியாளர் நிறைமதி வரவேற்றார். ஊராட்சி தலைவர் தாட்சாயணி தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. மேலாண்மை குழு தலைவர் அஸ்வினி, ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா, கல்விக் குழு உறுப்பினர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவியாசிரியர் சிறுமலச்செல்வி நன்றி கூறினார்.

Advertisement