அரசு கல்லுாரி ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது. முதல்வர் முனியன் தலைமை தாங்கி ஆண்டறிக்கை வாசித்தார். வேதியியல் துறை தலைவர் தர்மராஜா வரவேற்றார். விழாவில் திருவள்ளூவர் பல்கலை முன்னாள் துணை வேந்தர் ஜோதிமுருகன், திருக்கோவிலுார் அரசு கல்லுாரி முதல்வர் மகாவிஷ்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர். டி.எஸ்.பி.,தேவராஜ் வாழ்த்தி பேசினார்.

விழாவில் கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், கபடி, வாலிபால், கிரிக்கெட், டேபிள்டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி மற்றும் வருகை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியை தமிழ் துறை தலைவர் மோட்ச ஆனந்தன் தொகுத்து வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் சரவணன் நன்றி கூறினார்.

Advertisement