பெண் மீது தாக்குதல் உறவினர்கள் 2 பேர் கைது
சின்னசேலம்: சின்னசேலத்தில் இளம் பெண்ணை தாக்கிய அவரது உறவினர்கள், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னசேலம் அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் மகள் டால்னியா, 24; இவர் சென்னையில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் பணிபுரிகிறார்.
விடுமுறைக்காக கடந்த, 1 ம் தேதி வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், வீட்டில் இருந்த டால்னியாவை முன்விரோத தகராறு காரணமாக அவரது சித்தப்பாக்கள் அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், 40; மற்றும் செந்தில்நாதன், 38; ஆகிய இருவரும் தாக்கினர்.
பலத்த காயம் அடைந்த டால்னியா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு
-
தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
-
கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!
-
இன்று சவரனுக்கு ரூ.720 சரிந்த தங்கம்; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைவால் பெண்கள் மகிழ்ச்சி
-
பயணிகள் வருகை, சரக்கு போக்குவரத்து; பெங்களூரு விமான நிலையம் சாதனை!
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை
Advertisement
Advertisement