பள்ளி, கல்லுாரி செய்திகள்

தொழில் வழிகாட்டுதல் முகாம்

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை காம் கேப்ஸ் சங்கம் சார்பில் பங்குச்சந்தை, முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு திட்டம் என்ற தலைப்பில் தொழில் வழிகாட்டுதல் முகாம் நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி சுகிதா வரவேற்றார். மாணவி சிந்து அறிமுக உரையாற்றினார். தியாகராஜர் மேலாண்மை பள்ளி பேராசிரியர் டோனோ கோஷ் பேசினார். மாணவி கீர்த்திகா நன்றி கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி என்.எஸ்.எஸ்., மற்றும் கல்லுாரி உள் புகார் குழு சார்பில் முதலாம் ஆண்டு மாணவியருக்கு போக்சோ சட்டம் மற்றும் காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். உள்புகார் குழு கமிட்டி கன்வீனர் ஜெயந்தி வரவேற்றார். திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி பேசினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் விஷ்ணுபிரியா நன்றி கூறினார்.

ரத்ததான முகாம்

மதுரை: அமெரிக்கன் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் ரத்ததான முகாம் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையில் நடந்தது. அரசு மருத்துவமனையின் ரத்த பரிமாற்றுத் துறைத் தலைவர் டாக்டர் சிந்தா, ஒருங்கிணைப்பாளர் செல்வன், துணை முதல்வர் மார்ட்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், ஜான்ஜெயகாமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்கள், பேராசிரியர்கள் 200 யூனிட் ரத்தத்தை தானமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.

பேரவை நிறைவு விழா

மதுரை: சேர்மத்தாய் வாசன் கல்லுாரியில் மாணவப் பேரைவை நிறைவு விழா, கல்லுாரி மலர் வெளியீட்டு விழா ஆலோசகர் மாரீஸ்குமார் தலைமையில் நடந்தது. முதல்வர் கவிதா வரவேற்றார். பல்துறை நிகழ்வுகளின் சிறப்புகள், மன்றங்களின் திட்டங்கள் வாசிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா 'திரள் 2025' மலர் வெளியிட்டு பேசுகையில் 'கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்' என்றார். மாணவி ஹரிணி நன்றி கூறினார்.

நுாற்றாண்டு விழா

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் அம்பிகாபதி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் ஆரோக்கியராஜ், சாந்தி தலைமை வகித்தனர். மேற்பார்வையாளர் ரவி கணேஷ், இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் சண்முகபெருமாள் முன்னிலை வகித்தனர். நுாற்றாண்டு குறித்து கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழுவினர் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. படிப்பு, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.

Advertisement