போலீசிடம் தப்பிக்க முயற்சி; ரவுடிக்கு கால் எலும்பு முறிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன் பேட்டையை சேர்ந்த சுதர்சன், 27, என்ற ரவுடிக்கு போலீசிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.



மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுதர்சன்.27. பிரபல ரவுடியான இவர் மீது பல வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த சுதர்சனை கடந்த 2 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மாப்பிடுகை கிட்ட பாலம் அருகே மயிலாடுதுறை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த சுதர்சனை போலீசார் பிடிக்க முயன்றனர்.

போலீசிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த போது, சுதர்சனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனையடுத்து சுதர்சனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் சுதர்சனை கைது செய்து போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர்

Advertisement