போட்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்களின் கூட்டமைப்பு (போட்டோ ஜியோ) சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட சரண்விடுப்பு ஒப்படைப்பு 1.4.2026 முதல் வழங்கப்படும் என்பதை 1.4.2025 முதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை ஒருங்கிணைப்பாளர் இளையராஜா தலைமை வகித்தார். நிதிக்காப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார். அரசு அலுவலர் ஒன்றிய மாநில செயலாளர் அருள்ராஜ், அமைப்புச் செயலாளர் கலையரசன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement