குன்றத்து விவசாயிகள் கண்ணீர்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: தற்போது மழை பெய்வது வாழை, கரும்பு போன்ற பயிர்களுக்கு நல்லது.

கோடை உழவிற்கு ஏற்றது. ஆனால் காய்கறி பயிர்கள், பருத்தி, முருங்கை உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் தேங்கி நின்றால் அழுகிவிடும். இப்போது வயல்களில் மழைநீர் நிற்கிறது. தண்ணீரை வடிகட்ட வேலை ஆட்கள் கிடைக்கவில்லை. தாழ்வான பகுதி நிலங்களில் அதிகளவிற்கு தண்ணீர் இருக்கிறது. முடிந்தளவு வெளியேற்ற முயற்சித்து வருகிறோம். தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் சேதமடைந்து நஷ்டம் அடைய நேரிடும் என்றனர்.

Advertisement