புனித வெள்ளி அன்று மதுக்கடை மூட வேண்டும்: முன்னாள் பிஷப்
மதுரை: ''கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான புனித வெள்ளியன்று மதுபானக் கடைகளை மூட வேண்டும்'' என மதுரை முன்னாள் ஆர்ச் பிஷப் அந்தோணி பாப்புச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வுகளில் ஈஸ்டர் பண்டிகையும் (உயிர்ப்பு ஞாயிறு), அதற்கு முன்பு வரும் புனித வெள்ளியும் மிக முக்கியமானவை. காரணம், உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட, வெள்ளிக் கிழமையை புனித வெள்ளியாக, துக்க நாளாக அனுசரிக்கின்றனர். இந்தாண்டு ஏப்.16 ல் புனித வெள்ளி வருகிறது. அன்று கிறிஸ்தவர்கள் உண்ணா நோன்பு, ரத்ததானம் போன்ற செயல்களில் ஈடுபடுவர். சமூகநீதிக்காக வாழ்ந்து மடிந்தோர் மதிப்பை போற்றும் வகையில் குறிப்பிட்ட நாட்களில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. திருவள்ளுவர் தினம், மகாவீரர் ஜெயந்தி, வடலுார் ராமலிங்கர் நினைவு தினம், நபிகள் நாயகம் பிறந்தநாள், காந்தி ஜெயந்தி, குருநானக் ஜெயந்தி போன்ற நாட்களில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
அதேபோல உலகை உய்விக்க தன்னையே பலியாக்கிய இயேசு கிறிஸ்து உயிர் துறந்த புனிதவெள்ளி நாளையும், மது விற்பனை செய்யாத நாளாக அரசு அறிவிக்க வேண்டும், என கூறியுள்ளார்.
மேலும்
-
கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!
-
இன்று சவரனுக்கு ரூ.720 சரிந்த தங்கம்; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைவால் பெண்கள் மகிழ்ச்சி
-
அதிக பயணிகளை கையாண்டு பெங்களூரு விமான நிலையம் சாதனை; இதோ புதிய தகவல்
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை
-
மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
-
போலீசிடம் தப்பிக்க முயற்சி; ரவுடிக்கு கால் எலும்பு முறிவு