புத்தக நிலையம் திறப்பு

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் அறநிலையத்துறை சார்பில் ஆன்மிக புத்தக நிலையத்தை காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இத்துறையின் பதிப்பக பிரிவில் மறுமதிப்பு செய்யப்பட்ட ஆன்மிக புத்தகங்கள் மட்டும் இங்கு விற்கப்படுகிறது. கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி, மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, கவுன்சிலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement