பள்ளியில் புதிய தளம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கூடல் மலை தெருவிலுள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நகராட்சி பொது நிதி ரூ. 5 லட்சத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி நடக்கிறது.

அப்பணியை பார்வையிட்ட மண்டல தலைவர் சுவிதா கூறுகையில், 'பள்ளி வளாகம் குண்டும் குழியுமாக கிடந்தது. மழைக் காலங்களில் அவை சேறும் சகதியுமாக மாறியது. பள்ளிக் குழந்தைகள் அவதியுற்றனர். குழந்தைகள் வசதிக்காக அங்கு பேவர் பிளாக் தளம் அமைக்கப்படுகிறது'' என்றார்.

Advertisement