மக்கா குப்பை சேகரிப்பு

மதுரை: மதுரை கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் மக்கா குப்பை சேகரிக்கப்பட்டது.

பி.பீ.குளம் சமூக ஆர்வலர் மகாமாயன், குப்பை வங்கி துவங்கி மக்கா குப்பையை மறுசுழற்சி செய்கிறார். அவரிடம் 500 கிலோ மக்கா குப்பை சங்கம் சார்பில் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டது. மக்கும், மக்கா குப்பையை தனித்தனியாக சேகரித்து வழங்கவும், காலி பிளாட்டுகளில் குப்பை கொட்டுவதை தவிர்க்கவும், மதுரையை குப்பையில்லா நகரமாக மாற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாதம் இருமுறை குப்பை சேகரிக்கவும் திட்டமிடப்பட்டது. சங்கத் தலைவர் ராகவன், உபதலைவர் ரகுபதி, செயலாளர் பழனிக்குமார், இணைச் செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement