செயல்முறை பயிற்சி

மேலுார்: மேலுார் தெற்குத்தெருவில், மதுரை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதி ஆண்டு மாணவி ஜெயா தலைமையில் மாணவிகள் கிராம தங்கல் மற்றும் கிராமப்புற அனுபவதிட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி அளித்தனர்.

முகாமில் தண்டு துளைப்பான் பூச்சி குறித்தும், இப்பூச்சியினால் நெல் பயிரில் ஏற்படும் பாதிப்புகள், கட்டுப்படுத்தும் முறை, மகசூல் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து விளக்கினர்.

Advertisement