அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு

திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனையில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 40 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

காலை நேரங்களில் திருவாடானையை சுற்றியுள்ள கிராம மக்கள் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு உறவினர்களுடன் வந்து செல்கின்றனர். இங்கு அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் பராமரிப்பின்றி பழுதானதால் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கடைகளில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளையும் இல்லை. இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை பழுது பார்த்து நோயாளிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement