மது பாட்டில்கள் பறிமுதல்

காங்கயம்; காங்கயம் போலீசார் காங்கயம், நத்தக்காடையூர், படியூர் பகுதியில் சோதனை நடத்தினர்.

வீரணம்பாைளயம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராமநாதபுரம், கருங்காலக்குடியைச் சேர்ந்த வினீத், 22, பிடிபட்டார். அவரிடமிருந்து 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொத்திபாளையம் அருகே மது விற்பனை செய்த புதுக்கோட்டை, பேரானுாரைச் சேர்ந்த தர்மதுரை, 28, என்பவரிடமிருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Advertisement