பனை மரங்களை வெட்டினால் நடவடிக்கை

திருவாடானை: பனை மரங்களை சட்டத்திற்கு புறம்பாக வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாடானை தாசில்தார் ஆண்டி கூறினார். அவர் கூறியதாவது:

திருவாடானை தாலுகாவில் செங்கல் சூளை மற்றும் பல்வேறு தேவைகளுக்காக ரோட்டோரம் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் பனை மரங்களை சிலர் வெட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தொண்டி அருகே புதுக்குடி ரோட்டோரம் இருந்த 18 பனை மரங்களும், தினையத்துார் கண்மாய்க்குள் இருந்த பனை மரங்களும் வெட்டப்பட்டுள்ளன.

இது குறித்து தொண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பனை மரங்களை வெட்டுவதற்கு முன்பு கலெக்டரின் அனுமதி பெற வேண்டும். பனை மரங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே அனுமதி இல்லாமல் பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement