டூவீலர் மெக்கானிக்களுக்கு 'பி.எஸ்., 6' பயிற்சி வகுப்பு

அவிநாசி; அவிநாசி சீனிவாசபுரத்தில் உள்ள கோவில் மண்டபத்தில் அவிநாசி பைக் டெக்னீசியன் அசோசியேஷன் மற்றும் சிம்ஸ் நிறுவனம் இணைந்து டூவீலர் மெக்கானிக்களுக்கு பி.எஸ்.6 இன்ஜின் குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு இலவசமாக நடந்தது.

மொபில் ஆயில் வினியோகஸ்தர் சஞ்சய் குமார், அவிநாசி பைக் டெக்னீசியன் அசோசியேஷன் நிறுவனத் தலைவர் திவாகர், தலைவர் நட்ராஜ், செயலாளர் சிவசங்கர்,பொருளாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டூவீலர் மெக்கானிக்குகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பி.எஸ். 6 என்ஜின் குறித்த விளக்கங்களை கேட்டறிந்தனர்.

Advertisement