திரவுபதி அம்மன் கோயில் ஊர்வலம்

திருவாடானை: திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா மார்ச் 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பீமன் வேடம், அர்ச்சுனன், திரவுபதி திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

முக்கிய நிகழ்வாக மகாபாரத போரை நினைவு கூரும் வகையில் திரவுபுதி கூந்தலை அவிழ்த்து விட்டு ஆக்ரோஷமாக சென்ற காட்சிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு கோயில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Advertisement