விருப்ப மொழிப்பாடம் எழுத யாரும் இல்லை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்ப மொழி பாடத்தேர்வு நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் யாரும் இத்தேர்வை எழுதவில்லை.
மார்ச், 28ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. மாவட்டம் முழுதும், 108 மையங்களில், 15 ஆயிரத்து, 87 மாணவர்கள், 15 ஆயிரத்து, 148 மாணவியர், மொத்தம், 30 ஆயிரத்து, 235 பேர் தேர்வெழுத தகுதியானவர்கள். முதல் நாள் தமிழ்த்தேர்வும், கடந்த, 2ம் தேதி ஆங்கிலத்தேர்வும் நடந்தது. தேர்வு அட்டவணைப்படி நேற்று, விருப்ப மொழிப்பாடத்தேர்வு.
தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக ஒரு மொழி படித்து தேர்வெழுத விரும்புபவர் மொழிப்பாடத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கலாம். ஜெர்மன், பிரெஞ்சு, சமஸ்கிருதம், குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், லத்தீன், பாரசீகம், உருது, ஹிந்தி, கன்னடம் ஆகிய தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வெழுதவும் தேர்வுத்துறை வாய்ப்பு வழங்குகிறது. இத்தேர்வு எழுதுவோர், மொத்த மதிப்பெண், 500க்கு பதிலாக, 600க்கு எவ்வளவு என மதிப்பிடப்படும்.
இத்தேர்வுகளுக்கு திருப்பூர் மாவட்டத்தில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. நேற்று விருப்ப மொழித்தாள் தேர்வை யாரும் எதிர்கொள்ளவில்லை. இருப்பினும், தேர்வுத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நேற்று தேர்வு மையங்களாக செயல்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் காலை (பத்தாம் வகுப்பு தேர்வுக்காக) விடுமுறை விடப்பட்டு, மதியம் முதல் செயல்பட்டது; பிற வகுப்புகள் நடத்தப்பட்டது.
மேலும்
-
ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; வாலிபர் கைது
-
பிரதமர் மோடி நாளை வருகை; ராமநாத சுவாமி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
-
அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு
-
தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
-
கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!
-
இன்று சவரனுக்கு ரூ.720 சரிந்த தங்கம்; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைவால் பெண்கள் மகிழ்ச்சி