மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான செங்குடி, வரவணி, எட்டிய திடல், முத்துப்பட்டினம், இருதயபுரம், புல்லமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் எள், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் கோடை சாகுபடியாக விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கடும் வெப்பம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வாடி வதங்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இரண்டு நாட்களாக ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை கை கொடுத்ததை தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி செய்துள்ள கோடை சாகுபடி பயிர்கள் மழையால் புத்துணர்ச்சி பெற்றுள்ளன.

கோடை மழை கை கொடுத்ததை தொடர்ந்து கோடை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement