மணற்பாங்கான பகுதிகளில் எள் சாகுபடி விழிப்புணர்வு ஏற்படுத்தாத வேளாண் துறை

திருப்புல்லாணி: மணற்பாங்கான பகுதிகளாக உள்ள திருப்புல்லாணி பகுதிகளில் எள் விவசாயம் செய்வதற்கு வேளாண் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
திருப்புல்லாணி சுற்றுவட்டாரப் பகுதிகளான வண்ணாங்குண்டு,
தினைக்குளம், பத்திராதரவை, நைனாமரைக்கான், ரெகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் அதிகளவு எள் சாகுபடி செய்துள்ளனர். நெல் விவசாயம் செய்த பிறகு அதே நிலத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே ஆர்வம் உள்ள விவசாயிகள் எள் பயிரிட்டுள்ளனர்.
எண்ணெய் வித்து பயிரான எள் சாகுபடியை இரண்டாம் போகத்திற்கு பயன்படுத்தினால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரும்பாலும் கோடை மழையில் எள் விவசாயம் விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது. எள் சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:
திருப்புல்லாணி வேளாண் துறை அலுவலகம் சார்பில் இரண்டாம் கட்ட சாகுபடி குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது கிடையாது. விவசாயிகள் தங்களது ஆர்வத்தின் பேரில் குறிப்பிட்ட இடங்களில் குறைந்த அளவே எள் சாகுபடி செய்துள்ளனர். இயற்கை உரத்தை பயன்படுத்துகின்றனர்.
இன்றைய தேதியில் மார்க்கெட்டில் எள்ளுக்கு நல்ல விலை இருந்தும் அவற்றை முறையாக பயிரிடுவதற்கான ஆலோசனைகள், மானிய விபரங்கள் உள்ளிட்டவைகளை வழங்காமல் பெயரளவிற்கு கூட்டங்களுக்குச் சென்று அறிக்கை சமர்ப்பிப்பதில் மட்டுமே வேளாண் துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் எள் விவசாயத்தை ஊக்குவித்தால் அதிகளவு எள் விவசாயம் இப்பகுதியில் மேலும் செழிப்பதற்கு வழிவகை ஏற்படும் என்றனர்.
மேலும்
-
டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி பயணம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
கர்நாடகாவில் சோகம்: நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 5 பேர் பலி, 11 பேர் காயம்
-
ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; வாலிபர் கைது
-
அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு
-
தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
-
கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!