மிளகாய்க்கு வேளாண் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பருவம் தவறிய மழை மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குண்டு, சம்பா ரக மிளகாய்க்கு தேசிய வேளாண் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் நிறுவனத் தலைவர் பாக்கியநாதன் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 16,500 எக்டேரில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டது.
கார்த்திகையில் நடவு செய்து தை மாதம் வரை தொடர் மழை மற்றும் பல்வேறு நோய்களால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக தேரிருவேலி, காக்கூர், கருமல், உலையூர், தாளியேரந்தல், கடம்போடை, வளநாடு, கோடரியேந்தல், பொக்கனாரேந்தல் போன்ற இடங்களில் கடன் வாங்கி செலவு செய்த விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் இன்றி சிரமப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு குவிண்டால் ரூ.3000 வரை மிளகாய் வத்தல் விலை போனது. தற்போது விலை குறைந்து ரூ.1500, ரூ.2000க்கு விற்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் நுாறு சதவீதம் மிளகாய் பயிர் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும்
-
ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; வாலிபர் கைது
-
அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு
-
தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
-
கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!
-
இன்று சவரனுக்கு ரூ.720 சரிந்த தங்கம்; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைவால் பெண்கள் மகிழ்ச்சி
-
பயணிகள் வருகை, சரக்கு போக்குவரத்து; பெங்களூரு விமான நிலையம் சாதனை!