மேலமடை ரோட்டில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலமடை ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளம் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து புல்லமடை, வல்லமடை, மேலமடை, கொக்கூரணி வழியாக ஆனந்துார் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் அப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினார் பயனடைகின்றனர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் மேலமடை பகுதியில் ரோட்டின் நடுவில் குழி போன்ற மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில், அவ்வழியாக செல்லும் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பது தெரியாமல், விபத்துக்களில் சிக்குகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டின் நடுவில் உள்ள மெகா பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement