காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் வளைவில் போக்குவரத்து நெரிசல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

காரியாபட்டி: காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் வளைவில் வாகனங்களை நிறுத்தி வருவதால், போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.

காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் வளைவில் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளன. அப்பகுதி குறுகிய ரோடாகவும், வளைவாகவும் இருப்பதால் இரு வாகனங்கள் விலகிச் செல்வதில் சிரமம் இருந்து வருகிறது.

வளைவில் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். வளைவு என்பதால் எதிரே வாகனங்கள் தெரியாது.

வழிவிட உடனடியாக ரோட்டை விட்டு ஒதுங்க இடம் இல்லாத சூழ்நிலை இருப்பதால் போக்குவரத்திற்கு நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அச்சம் உள்ளது.

வளைவில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதனை தடுத்து போக்குவரத்திற்கு இடையூறு இன்றி கண்காணிக்க போலீசார் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement