மாந்தோப்பு பேராலி ரோடு சேதம் வாகனங்கள் செல்ல சிரமம்

காரியாபட்டி: மாந்தோப்பில் இருந்து பேராலி செல்லும் ரோடு சென்னம்பட்டி கால்வாய் இடையே கட்டப்பட்ட பாலம் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் சென்றுவர சிரமமாக உள்ளது.

காரியாபட்டி மாந்தோப்பில் இருந்து அழகியநல்லூர், பேராலி செல்லும் ரோடு 5 கி.மீ., தூரம் உள்ளது. சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழைக்கு சென்னம்பட்டி மல்லாங்கிணர் கால்வாய் குறுக்கே கட்டப்பட்ட பாலம் உடைப்பு ஏற்பட்டது. தற்போது அந்த வழியாக வாகனங்கள், ஆட்கள் கூட நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் பல கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எரிபொருள் செலவு, நேரம் வீணாவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அது மட்டுமல்ல விவசாய பணிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.

விளை பொருட்களை எடுத்துக் கொண்டு பல கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டியிருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, கால்வாயின் குறுக்கே உடைப்பு ஏற்பட்ட பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement