வக்ப் மசோதாவுக்கு ஆதரவு எதிரொலி; நிதிஷ் கட்சியில் இருந்து 5வது முக்கிய தலைவர் விலகல்

பாட்னா: வக்ப் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்த நிதிஷ்குமாரை கண்டித்து, பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து முக்கிய தலைவர் விலகி உள்ளார்.
பார்லிமெண்டில், வக்ப் சட்ட திருத்த மசோதா பல கட்ட விவாதங்களுக்கு பின்னர் நிறைவேறியது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிவிட்ட நிலையில் அடுத்தகட்டமாக இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று என்று பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பாராட்டி வருகின்றன. இந் நிலையில் பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் முக்கிய தலைவர்கள் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர் முகமது ஆசிர் அன்வார் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து பலரும் அதிருப்தி கருத்துகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகும் முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மொத்தம் 4 முஸ்லிம் தலைவர்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
தற்போது, கட்சியின் இளைஞரணி துணை தலைவரான டாப்ரஸ் ஹசன். கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, தமது ராஜினாமா கடிதத்தை பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அவர் தமது ராஜினாமா கடிதத்தில், மதசார்பின்மை பிம்பத்தை நிலை நிறுத்துவீர்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடுடன் கூடியவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளீர்கள். எனது பொறுப்பு இத்தோடு முடியவில்லை, ஒரு புதிய ஆரம்பம் தொடர்கிறது என்று கூறி உள்ளார்.


மேலும்
-
டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி பயணம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
கர்நாடகாவில் சோகம்: நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 5 பேர் பலி, 10 பேர் காயம்
-
ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; வாலிபர் கைது
-
அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு
-
தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
-
கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!