முதல் நாளில் ஆர்வத்துடன் குவிந்த மாணவர்கள், பெற்றோர்; பயனுள்ள உயர்கல்வி ஆலோசனைகளால் மகிழ்ச்சி, உற்சாகம்

திண்டுக்கல் பி.வி.கே. மகாலில் நேற்று முதல் நாள் கருத்தரங்கை கோவை ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி டீன் விஜயசாமுண்டீஸ்வரி, ஸ்ரீராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சித்ரா, கோவை கற்பகம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மணிமாறன், ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரி பேராசிரியர் சந்தானகிருஷ்ணன், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாணவிகள் மிருதுளா வர்ஷிணி, விவாஹா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
கல்வி நிறுவனங்களின் அரங்குகளை கோவை ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி டீன் விஜயசாமுண்டீஸ்வரி, ஸ்ரீராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சித்ரா, கோவை கற்பகம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மணிமாறன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை ஓரிடத்தில்...
கல்வி நிறுவனங்களின் கண்காட்சி காலை 10:00 மணி முதல் இடைவேளையின்றி மாலை 6:30 மணி வரை
நடந்தன. மாணவர்கள், பெற்றோர் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், கட்டண விபரம், படிப்புக்கான வேலைவாய்ப்புகள் அங்கேயே கேட்டு பெற்றோர் தெரிந்துகொண்டனர். கல்லுாரிகள் குறித்த கட்டமைப்பு வசதிகள், முந்தைய மாணவர்கள் பெற்ற வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பெற்றோர் கேட்டு தெரிந்துகொண்டனர்.
விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரை ஒரே குடையின் கீழ் உள்ள இந்த வசதியால் தேவையான ஆலோசனைகளை பெற்ற பெற்றோர் நிம்மதியடைந்தனர். இதன்மூலம் கல்லுாரிகளை தேடிச் சென்று அலைய வேண்டிய வேலை தவிர்க்கப்பட்டது என பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் செயல்படுகிறது. மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜி., அன்ட் டெக்னாலஜி, கோவை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து வழங்குகின்றன.
நிகழ்ச்சியில் இன்று (ஏப்.5) உயர்கல்வி தொடர்பாக ஐ.எப்.எஸ்., அதிகாரி சுதா, ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் தொடர்பாக பேராசிரியர் டேவிட் ரத்தினராஜ், வணிக மேலாண்மை தொடர்பாக பேராசிரியை பத்மாவதி, சைபர் பாதுகாப்பு, கிளவுடு கம்ப்யூட்டிங் தொடர்பாக பேராசிரியர் தினேஷ் பரந்தாகன், ஐ.டி., படிப்புகள் தொடர்பாக சுவாமி சிதானந்தமிர்தா ஆகியோர் பேசுகின்றனர்.
மேலும்
-
டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி பயணம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
கர்நாடகாவில் சோகம்: நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 5 பேர் பலி, 10 பேர் காயம்
-
ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; வாலிபர் கைது
-
அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு
-
தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
-
கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!