பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவு


சிட்னி: பப்புவா நியூ கினியாவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ஆஸ்திரேலியா அருகே தீவு நாடான பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது. இங்கு அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கிம்பேயிலிருந்து தென்கிழக்கே 197 கிலோமீட்டர் தொலைவில், 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளதால் பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு 30 நிமிட கழித்து, அதே பகுதியில் இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.



இது ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அண்மையில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement