அடுத்தாண்டு சட்டசபை தேர்தல்: நாம் தமிழர் வேதாரண்யம் தொகுதிக்கு இப்போதே வேட்பாளர் ரெடி

2

சென்னை: வேதாரண்யம் தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார்.


@1brதேர்தலுக்கான தேதிகள் எப்போது என்பதே தெரியாது. ஆனால், தேர்தல் வரும் போது வரட்டும் என்று அதற்கு முன்னரே தொண்டர்களிடம் மேடையில் வேட்பாளர்கள் பெயர்களை நரம்புகள் தெறிக்க அறிவிப்பது நாம் தமிழர் சீமானின் வழக்கம்.


இதே நடைமுறையை அவர் கடந்த காலங்களில் பின்பற்றி வருகிறார். தொண்டர்களிடையே உற்சாகத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தனித்துப்போட்டி என்பதில் மாற்றம் இல்லை என்று உணர்த்துவதற்காகவும் இந்த வழக்கத்தை சீமான் பின்பற்றி வருகிறார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.


இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் வேதாரண்யம் தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் சுனந்தா தாமரைச் செல்வன் தமது சமூக வலை தள எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


அதில் வேதாரண்யம் சட்டசபை தொகுதியின் வேட்பாளர் அறிமுக கலந்தாய்வுக் கூட்டம் நாளை (ஏப்.6) வேதாரண்யத்தில் நடக்க உள்ளது. வேட்பாளர் பெயர் இடும்பாவனம் கார்த்திக் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.


வேதாரண்யம் நாம் தமிழர் வேட்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தான் என்ற விவரம் அறிந்த கட்சியினர் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement