தாது மணல் முறைகேடு வழக்கு; கனிமவள நிறுவனங்களில் சி.பி.ஐ., சோதனை

திருநெல்வேலி: தாது மணல் முறைகேடு வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் கடலோர கனிமவள நிறுவனங்களில் இன்று (ஏப்ரல் 05) சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில், தாது மணல் அதிக அளவில் உள்ளது. இதில், கதிரியக்கத் தன்மை உடைய கனிமங்கள், அதிக விலை மதிப்புள்ள தாது உப்புகள் உள்ளன. இதை அறிந்த, 'வி.வி. மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட், பீச் மினரல்ஸ், இன்டஸ்ட்ரியல் மினரல்ஸ்' உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள், தாது மணலை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பதாக 2012ம் ஆண்டு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, சத்யபிரதா சாஹு ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்களும் அறிக்கை அளித்தன. தாது மணல் கடத்தல் வாயிலாக, 5,832 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, 5,832 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோதமாக நடந்த தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 05) முதற்கட்டமாக, தாது மணல் முறைகேடு வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையில் கடலோர கனிமவள நிறுவனங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இது தொடர்பாக, சென்னையிலும் 3 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திடீர் விசிட்
சட்டசபையில் பேசுகையில், கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திருநெல்வேலிக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார். அமைச்சர் துரைமுருகன் திடீர் வருகை அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.
வாசகர் கருத்து (3)
GMM - KA,இந்தியா
05 ஏப்,2025 - 17:24 Report Abuse

0
0
Reply
எவர்கிங் - ,
05 ஏப்,2025 - 13:53 Report Abuse

0
0
Reply
Sridhar - Jakarta,இந்தியா
05 ஏப்,2025 - 13:51 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement