உச்சத்தில் அமெரிக்கா-சீனா வர்த்தகப்போர்: கடுமையாக சாடிய அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா பதிலுக்கு வரி விதித்துள்ளது. 'தேவையில்லாமல் மறுபடியும் சீனா தவறு செய்கிறது' என அதிபர் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்காவுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அதிரடியாக வரி போடுவோம் என்று அதிபராக பதவி ஏற்ற அன்றே டிரம்ப் சொல்லி இருந்தார். அடுத்த சில நாட்களில், சீனாவில் இருந்து இறங்கும் பொருட்களுக்கு ஏற்கனவே இருக்கும் வரியுடன் சேர்த்து கூடுதலாக 10 சதவீதம் வரி போட்டார்.
வர்த்தகப்போரை தூண்ட வேண்டாம் என்று எச்சரித்த சீனா, சர்வதேச வர்த்தக கவுன்சிலில் முறையிட்டது. பின்னர் பழிக்குப்பழி நடவடிக்கையாக அமெரிக்காவின் சில வகை பொருட்களுக்கு 10 முதல் 15 சதவீதம் வரை வரி விதித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் சோயா பீன்ஸ், பால் பொருட்கள் உள்ளிட்டவைக்கு 10 சதவீதமும், கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்களுக்கு 15 சதவீதமும் சீனா வரி விதித்தது.
இதற்கிடையே, சீனா, தென்கொரியா, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏப்ரல் 2ம் தேதி டிரம்ப் பரஸ்பர வரி விதித்தார். இதன் மூலம் சீனாவுக்கு 3வது முறையாக வரி விதிக்கப்பட்டது. சீனா பொருட்களுக்கு 34 சதவீதம் வரி விதித்து டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இந்த வரி விதிப்பு ஏப்ரல் 9ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனா பதிலுக்கு வரி விதித்துள்ளது.
இது குறித்து சீனா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. இந்த விவகாரத்தில் நியாயமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அமெரிக்கா விதித்த 34 சதவீத வரிக்கு பழிக்குபழியாக அவர்களுக்கு நாங்களும் 34 சதவீத வரி விதித்துள்ளோம். இந்த கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு, ''தேவையில்லாமல் மறுபடியும் சீனா தவறு செய்கிறது. அமெரிக்காவின் அதிரடியை கண்டு சீனா பயந்து விட்டது'' என டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.





மேலும்
-
மீனவர்கள், படகுகளை விடுவிக்கணும்; இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல்: நாம் தமிழர் வேதாரண்யம் தொகுதிக்கு இப்போதே வேட்பாளர் ரெடி
-
தாது மணல் முறைகேடு வழக்கு; கனிமவள நிறுவனங்களில் சி.பி.ஐ., சோதனை
-
90 சதவீதம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட ஊராட்சி; தலைவராக ஹிந்து பெண் தேர்வு: மத ஒற்றுமைக்கு உதாரணம்
-
ரூ.40 கோடி சம்பளத்துக்கு கணக்கு சொல்லுங்க; 'எம்புரான்' இயக்குநர் பிருத்விராஜுக்கு ஐ.டி.நோட்டீஸ்
-
டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி பயணம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்