7000 கிராமங்களில் விதவைகளுக்கு விடிவுகாலம்: மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட சமூக மாற்றம்

1

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 7000 கிராமங்களை சேர்ந்த விதவைகளுக்கு விடிவு ஏற்பட்டது. விதவைகளை துன்புறுத்தும் மற்றும் அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் நடைமுறைகள் மற்றும் சடங்குகளை ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் சமூக ஆர்வலர் பிரமோத் ஜிஞ்சாடே கூறியதாவது: மஹாராஷ்டிராவில் உள்ள 27,000 கிராம பஞ்சாயத்துகளில், 7,683 கிராமங்கள் கிராம சபைகளை நடத்தி, விதவைகளுக்கு எதிராக பாகுபாடு காட்டும் பழக்கவழக்கங்களை அகற்றப்பட்டன.

2022 ஆம் ஆண்டில் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹெர்வாட், பெண்கள் கண்ணியத்துடன் வாழும் உரிமையைப் பேணுவதற்காக விதவைகளுக்கு எதிரான நடைமுறைகளை தடை செய்து, நாட்டின் முதல் கிராமமாக மாறிய பிறகு, இந்தப் பிரசாரம் வேகம் பெற்றது. இந்த நடைமுறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் பிரசாரத்தில் ஈடுபட்டன.
இந்த நடைமுறைகளை நிறுத்த கிராமங்களில் கிராம சபா தீர்மானங்கள் நிறைவேற்ற மாநில அரசு ஊக்குவித்தது.


விழிப்புணர்வு, கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு மூலம் மனநிலைகளை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தன.பழங்கால நடைமுறைகளை ஒரே இரவில் நிறுத்த முடியாது. குடும்பங்களில் உள்ள பெரியவர்களை சில சடங்குகளை விட்டுவிடச் செய்வது கடினம், இன்னும் ஒரு வேலை நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு பிரமோத் ஜிஞ்சாடே கூறினார்.

Advertisement