தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என உணர வேண்டும்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகேள்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை மத்திய பா.ஜ., அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள்.
அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கடந்த 02-04-2025 அன்று இறையாண்மை கொண்ட நமது தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்டு - வாய் மூடி மௌனித்திருக்கிறது மத்திய அரசு.
எனவே, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை மத்திய பா.ஜ., அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.



மேலும்
-
14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் பணி நிறுத்தம்: ஹஜ் நெரிசல் தவிர்க்க சவுதி நடவடிக்கை
-
ஹாரி புரூக் புதிய கேப்டன்: இங்கிலாந்து அணிக்கு
-
தங்கம் வென்றார் ருத்ராங்க்ஷ்: உலக துப்பாக்கி சுடுதலில்
-
பட்டிதார், விராத் கோஹ்லி அரை சதம்: மும்பை அணிக்கு 222 ரன்கள் இலக்கு
-
துபாய் பட்டத்து இளவரசர் இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியை சந்திக்கிறார்!
-
அமெரிக்காவுக்கு வெளிநாட்டு பணம் கொட்டுகிறது; விலைவாசி குறைகிறது: அதிபர் டிரம்ப் பெருமிதம்